இவர்களுக்கும் கிடைக்கும் உதவித்தொகை!

முதுமை காரணமாக உழைத்து சம்பாதிக்க முடியாமலும், உறவினர்களின் ஆதரவற்ற நிலையிலும் வாழும் முதியோர்களின் நலனுக்காக தமிழகத்தில் தேசிய முதியோர் உதவித்தொகை திட்டம் செயல்பட்டு வருகிறது. இதன்படி முதியோர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாயை தமிழக அரசு வழங்குகிறது. 60 வயதைக் கடந்த ஆதரவற்ற ஆண் / பெண் ஆகிய இருவரும் இதைப் பெறத் தகுதியுடையவர்கள். இவர்கள் ஏழ்மை நிலையில் இருக்க வேண்டும். கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், விதவைகள், மாற்றுத் திறனாளிகள், பார்வையற்றவர்கள் ஆகியோருக்கும் இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது.

ரூ. 50 ஆயிரத்துக்கும் குறைவான மதிப்புள்ள சொத்துகள் உள்ளோரே இதைப் பெறுவதற்கு தகுதியானவர்கள் என்ற நிலை இருந்தது. இதனால் பலரது விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. இதுகுறித்து பலரும் வேண்டுகோள் வைத்ததால், ‘ஒரு லட்ச ரூபாய் வரை சொத்து மதிப்பு உள்ளவர்களுக்கும் இது வழங்கப்படும்’ என தமிழக முதல்வர் திரு. எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதனால் கூடுதலாக 5 லட்சம் பேருக்கு இந்த உதவித்தொகை கிடைக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *