கோவையில் முதியோர் நல மருத்துவத் துறை!

தொழில் நகரமான கோவையில் உள்ள பி.எஸ்.ஜி மருத்துவமனையில் முதியோர் நல மருத்துவத் துறை தொடங்கப்பட்டுள்ளது. முதியோர் நல மருத்துவர் வி.எஸ்.நடராசன் முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்டார். ‘‘முதியோர்களின் உடல்நலம், மனநலம் மற்றும் குடும்ப நலம் சார்ந்த பல்வேறு பிரச்னைகளை முழுமையாகக் கண்டறிந்து சிகிச்சை அளிப்பதுதான் இந்தத் துறையின் முக்கிய நோக்கம். முதியோர்களுக்கு சிறப்பு முழு உடல் பரிசோதனை செய்யப்படும். ஆரம்ப நிலையில் உள்ள மறதி நோய், உதறுவாதம், நிலை தடுமாறுதல் உள்ளிட்ட பல தொல்லைகளை இந்தப் பரிசோதனைகள் மூலம் கண்டறிந்து சிகிச்சையளிக்க முடியும். முதியோர்கள் தங்கள் அன்றாடத் தேவைகளை தங்களாகவே செய்து கொள்ள தக்க பயிற்சியும் அளிக்கப்படும்’’ என்றார் அவர்.

கலைமாமணி திரு. சுகி சிவம் கௌரவ விருந்தினராகக் கலந்து கொண்டார். ‘முதுமை ஒரு வரம்’ என்ற தலைப்பில் கருத்துகளை நகைச்சுவையுடன் சொல்லி, சிந்திக்கவும் வைத்தார். ‘‘நமக்காக வாழ்ந்தால் முதுமை ஒரு சாபம், மற்றவர்களுக்காக வாழ்ந்தால் முதுமை ஒரு வரம்’’ என்று கூறி பலரின் கைத்தட்டல்களைப் பெற்றார். திரு. எல்.கோபாலகிருஷ்ணன், டாக்டர் ஜெ.எஸ்.புவனேஸ்வரன் மற்றும் டாக்டர் சத்தீஸ்குமார் ஆகியோர் விழாவில் பங்கேற்றனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *