மறைந்த யோகா அடையாளம்!

இந்தியாவின் முதிய யோகா நிபுணர் என்ற பெருமை கொண்ட நானம்மாள் தனது 99 வயதில் இயற்கை எய்தினார். கோவை கணபதி பகுதியில் வாழ்ந்த நானம்மாள், தன் 8 வயதில் யோகா கற்றுக் கொண்டார். அப்போது முதல் 99 வயது வரை தினமும் யோகா செய்வதை நிறுத்தியதில்லை. ‘யோகா செய்ய முதுமை தடையில்லை’ என்பதை மக்களுக்கு உணர்த்தியவர். உடலை ஆரோக்கியமாக வைத்திருந்தால் மனமும் இளமையாக இருக்கும் என்பதற்கு அடையாளமாக இருந்தவர்.

தன் வாழ்நாள் முழுக்க 10 லட்சம் பேருக்கு யோகா கற்றுத் தந்திருக்கும் அவர், நூற்றுக்கணக்கான யோகா ஆசிரியர்களையும் உருவாக்கியுள்ளார். ‘பத்மஸ்ரீ’ விருது அவருக்கு அளிக்கப்பட்டது.

‘‘இன்னும் 48 நாட்களில் நான் இறந்துவிடுவேன்’’ என்று முன்கூட்டியே சொன்ன நானம்மாள், தன் ஆறு பிள்ளைகள், பேரக் குழந்தைகள், கொள்ளுப் பேரக் குழந்தைகள் என அனைவரையும் அழைத்து ஆசீர்வதித்திருக்கிறார். இப்படிச் சொன்ன 10 நாட்களில் கீழே விழுந்து அடிபட்டது. சுமார் ஒரு மாத காலம் படுத்த படுக்கையாக இருந்த அவர், சொன்னது போலவே மறைந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *