முதியோர்களுக்கு இலவச தடுப்பூசி!

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை முதியோர் நலப் பிரிவில், ‘முதியோர்களுக்கு இலவசமாக தடுப்பூசி போடப்படும்’ என்று உலக முதியோர் தினமான அக்டோபர் 1ம் தேதி அறிவிக்கப்பட்டது. விலையுயர்ந்த நிமோனியா தடுப்பு ஊசி, இங்கு ஒவ்வொரு புதன்கிழமையும் இலவசமாகப் போடப்படும். இதன்மூலம் ஊசி போட்டுக்கொண்டவர்களுக்கு நிமோனியா ஜுரம் மற்றும் சுவாசப் பிரச்னைகள் வராமல் தடுக்கப்படும். குடும்பத்தில் மற்றவர்களுக்கும், முக்கியமாக குழந்தைகளுக்கும் இந்நோய் பரவாமல் இருக்கும்.
இந்த அறிவிப்பை டாக்டர் வி.எஸ்.நடராசன் முதியோர் நல அறக்கட்டளை சார்பாக பூச்செண்டு கொடுத்து வாழ்த்துகிறோம்.  முதியோர் நல மருத்துவர் டாக்டர் வி.எஸ்.நடராசன் அவர்கள் பல ஆண்டுகளாக முதியவர்களுக்கான தடுப்பூசியின் அவசியத்தைப் பற்றி பல கருத்தரங்குகளில் பேசியும் பல நூல்களில் எழுதியும் வந்துள்ளார். இதுபற்றி விழிப்பு உணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தியுள்ளார். இந்தத் திட்டம் மூலம், முதியோர் தடுப்பூசி பற்றிய விழிப்பு உணர்வு ஏற்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *