முதியோர் நல மருத்துவருக்கு தமிழன் விருது!
முதியோர் நல மருத்துவருக்கு
தமிழன் விருது!
முதியோர் நல மருத்துவர் மற்றும் டாக்டர் வி.எஸ்.நடராசன் முதியோர் நல அறக்கட்டளையின்
நிறுவனர் – தலைவர் பத்மஸ்ரீ டாக்டர் வி.எஸ்.நடராசன் அவர்களுக்கு புதிய தலைமுறை தொலைக்காட்சி ‘தமிழன் விருது’ வழங்கியுள்ளது.
சமூக சேவை, வணிகம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், இலக்கியம், விளையாட்டு மற்றும் கலை போன்ற பல்வேறு துறைகளில் சாதனை படைத்தோருக்கு புதிய தலைமுறை தொலைக்காட்சி, விருது கொடுத்து கௌரவிக்கிறது. 2019ம் ஆண்டுக்கான ‘தமிழன் விருது’, டாக்டர் வி.எஸ்.நடராசன் அவர்களுக்கு கீழ்க்கண்ட சிறப்பு சேவைகளை தமிழ்நாட்டில் செய்தமைக்காக வழங்கியுள்ளது.
முதியோருக்கு அவசர காலத்தில் வீட்டிலேயே சென்று சிகிச்சையளிக்கும் திட்டம். முதியோர்களுக்கான தடுப்பூசி பற்றிய சொற்பொழிவுகள், நடைப்பயணம் போன்ற நிகழ்ச்சிகள். முதியோர் நலம் பேண சுமார் 35க்கும் மேற்பட்ட நூல்கள் வெளியீடு. சென்னையை அடுத்து ஈரோட்டில் அறக்கட்டளையின் சார்பாக ‘முதியோர் நல சேவை மையம்’ நிறுவியது. பள்ளி மாணவர்களிடையே முதியோர் வன்கொடுமை ஒழிப்பு பற்றிய விழிப்பு உணர்வு ஊட்ட உறுதிமொழி எடுத்துக் கொள்ளும் திட்டம்.
டாக்டர் அவர்கள், ‘‘நான் உயிரினும் மேலாக மதிக்கும் முதியோர்களுக்கு இவ்விருதை அர்ப்பணிக்கிறேன்’’ என்று கூறியபோது பலத்த கரவொலியால் அரங்கமே அதிர்ந்தது.