முதியோர் பாதுகாப்புக்கு புது திட்டம்!

திருநெல்வேலி மாநகர காவல்துறை, ‘வேர்களைத் தேடி’ என்ற மூத்த குடிமக்கள் பாதுகாப்புத் திட்டத்தை உலக முதியோர் தினமான அக்டோபர் 1ம் தேதி தொடங்கியது. தனியாக வாழும் முதியோர்களைக் குறிவைத்து நடைபெறும் குற்றங்களைத் தடுக்கவும், அவர்களை நூதன மோசடிகளிலிருந்து காக்கவும் அறிமுகம் செய்யப்பட்டதே ‘வேர்களைத் தேடி’ திட்டம்.
இதன்படி, ஒவ்வொரு காவல் நிலைய எல்லையிலும் தனியாக வசிக்கும் முதியோர் வீடுகளில் ‘வேர்களைத் தேடி’ என்ற பட்டா புத்தகம் வைக்கப்படும். இதில், அந்தப் பகுதி போலீஸ் ஸ்டேஷன் தொலைபேசி எண், காவல் கட்டுப்பாட்டு அறை எண் ஆகியவை இருக்கும். வாரம் ஒருமுறை போலீஸார் அவர்களின் வீடுகளுக்குச் சென்று குற்றத் தடுப்பு ஆலோசனை வழங்குவர். அவர்களது செல்போனில் காவல் கட்டுப்பாட்டு அறை போன் எண் ஸ்பீடு டயலில் பதிவு செய்யப்படும். இதன்மூலம், அவசர உதவிக்கு உடனே அழைக்க முடியும். செல்போன்களில் ‘காவலன் ஆப்’ டவுன்லோடு செய்து வைத்து, அதைப் பயன்படுத்தும் முறையும் கற்றுத் தரப்படும்.
எல்லா இடங்களிலும் செயல்படுத்த வேண்டிய நல்ல திட்டம் இது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *