97 வயதில் நோபல் பரிசு!

ஒருவர் தன் 97 வயதில் தினமும் அதிகாலை படுக்கையிலிருந்து எழுந்திருப்பதையே மகத்தான சாதனையாக நினைக்கலாம். ஆனால், 97 வயதில் வேதியியலுக்கான நோபல் பரிசு வாங்கி சாதனை புரிந்திருக்கிறார் ஜான் குட்எனஃப். மிக அதிக வயதில் நோபல் பரிசு வாங்கியவர் என்ற பெருமையும் இவருக்கே உண்டு.
மின்சார கார்களை இயக்குவதை சாத்தியமாக்கிய லித்தியம் பேட்டரிகள் உருவாக்கத்தில் இவர் முக்கிய பங்கு வகித்தார். அதுதான் இவருக்கு நோபல் கிடைக்கக் காரணமானது. ‘‘90 வயது தாண்டி வாழுங்கள். உங்களால் எதையும் சாதிக்க முடியும்’’ என்பதே உலகத்துக்கு இவர் சொல்லும் செய்தி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *