முதியோர்களுக்கு இலவச தடுப்பூசி!

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை முதியோர் நலப் பிரிவில், ‘முதியோர்களுக்கு இலவசமாக தடுப்பூசி போடப்படும்’ என்று உலக முதியோர் தினமான அக்டோபர் 1ம் தேதி அறிவிக்கப்பட்டது.

Read more

85 வயது மாணவி

கேரளாவைச் சேர்ந்த 85 வயதாகும் மூதாட்டி கெம்பி, முதியோர் கல்வியில் முக்கியமான தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றிருக்கிறார். கேரள அரசின் எழுத்தறிவு இயக்கத்தின் ஒரு பகுதியாக சமீபத்தில்

Read more

முதியோர் பாதுகாப்புக்கு புது திட்டம்!

திருநெல்வேலி மாநகர காவல்துறை, ‘வேர்களைத் தேடி’ என்ற மூத்த குடிமக்கள் பாதுகாப்புத் திட்டத்தை உலக முதியோர் தினமான அக்டோபர் 1ம் தேதி தொடங்கியது. தனியாக வாழும் முதியோர்களைக்

Read more

எங்கும் தடுப்போம் டெங்கு கொசுக்களை!

தமிழகத்தையே அச்சத்தில் ஆழ்த்தியிருக்கிறது டெங்கு ஜுரம். கடந்த சில ஆண்டுகளாகவே தமிழகத்தில் டெங்கு பரவலாக தாக்குதல் நிகழ்த்துகிறது. குறிப்பாக குழந்தைகள் நிறைய பேரை இது தாக்கி வதைப்பதால்

Read more

சிறந்த தம்பதி யார்?

எந்த விஷயத்திலாவது கருத்து வேறுபாடு வரும்போது, யார் விட்டுக் கொடுப்பது என்று போட்டி போட்டு, கணவனுக்காக மனைவியும், மனைவிக்காக கணவனும் விட்டுக் கொடுப்பதுதான் சிறந்த வாழ்க்கை என

Read more

மகிழ்வூட்டும் முதுமை!

‘அண்ணன்’ என்பது ‘அங்கிள்’ ஆகி, அதன்பிறகு ‘தாத்தா’ ஆவது எப்படி? ‘அக்கா’ என்பது ‘ஆன்ட்டி’ ஆகி, கடைசியில் ‘பாட்டிம்மா’ என அழைக்கப்படுவது எப்படி? எல்லோருக்குள்ளும் எழும் கேள்வி…

Read more

97 வயதில் நோபல் பரிசு!

ஒருவர் தன் 97 வயதில் தினமும் அதிகாலை படுக்கையிலிருந்து எழுந்திருப்பதையே மகத்தான சாதனையாக நினைக்கலாம். ஆனால், 97 வயதில் வேதியியலுக்கான நோபல் பரிசு வாங்கி சாதனை புரிந்திருக்கிறார்

Read more

ரசிக்க… சிரிக்க 2…

அந்த மாமி வீட்டில் பேசிக் கொண்டிருந்தோம். அவருடைய தோழி வந்திருந்தார். எங்கே வேலை பார்க்கிறார் எனும் கேள்விக்கு, ‘‘ஹவுஸ் வொய்ஃப்தான்’’ என்றார் மாமி தயக்கமாக! ‘‘தான்னு ஏன்

Read more

முதியோருக்கான சேமிப்புத் திட்டம்!

வரும் 2050ம் ஆண்டில் இந்தியாவில் 30 கோடி முதியோர்கள் இருப்பார்கள் என அரசின் ஒரு கணிப்பு சொல்கிறது. எனவே அவர்களின் மருத்துவத் தேவைகள், சமூகப் பாதுகாப்பு போன்ற

Read more

படிப்பினை!

முதிய தந்தையும், அவரின் இளம் வயது மகனும் அந்த உயர்தர உணவகத்துக்கு உணவருந்த வந்தனர். ‘‘எங்க அப்பாவுக்கு பிடித்த உணவைக் கொடுங்கள்!’’ என்று அவரிடம் கேட்டுக் கேட்டு ஆர்டர் கொடுத்தான் மகன். சில நிமிடங்களில் சுடச்சுட உணவு வந்தது. தம்பதிகளாகவும் குடும்பங்களாகவும் சாப்பிட வந்திருக்கும் பலருக்கு மத்தியில் இந்த இருவரும் விநோதமாகத் தெரிந்ததால், எல்லோருமே இவர்களை கவனித்தபடி இருந்தனர். முதுமையின் உச்சத்தில் இருந்த அந்தத் தந்தையால் தனது கைநடுக்கத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அவரால் உணவை எடுத்து சாப்பிட இயலவில்லை. இலையைத் தாண்டி டேபிள் முழுக்க சிந்தியது உணவு. மகன் ஊட்டி விட முயற்சித்தான். அதையும் அவர் அனுமதிக்கவில்லை. ‘‘நீ சாப்பிடுப்பா! நான் பார்த்துக்கறேன்” என்றார். ‘சரி’ என்று மகனும் சாப்பிட ஆரம்பித்தான். தந்தை நிதானமாக சாப்பிட முற்பட்டு, உணவை டேபிளிலும் கீழேயும் சிந்திக்கொண்டு அந்த பகுதியையே அசுத்தப்படுத்தி இருந்தார். அது மட்டுமில்லை… முகத்திலும் உடையிலும்கூட உணவுப் பொருட்கள் சிதறி இருந்தன. அவர் சாப்பிட்டு முடிக்கும் வரை காத்திருந்த மகன், அவரை கைத்தாங்கலாக அழைத்துச் சென்று கை கழுவச் சொல்லி, முகம் துடைத்துவிட்டு, அவரது உடைகளையும் சுத்தம் செய்து அழைத்து வந்தான். வெயிட்டர்களைக் கூப்பிட்டு டேபிளை கிளீன் செய்யச் சொன்னவன், அவர்களை சிரமப்படுத்தியதற்காக கனிவான குரலில் மன்னிப்பு கேட்டான். எல்லாவற்றையும் அங்கிருந்த பலரும் அருவருப்புடன் பார்த்துக்கொண்டிருந்தனர். சிலர் வெளிப்படையாக முணுமுணுக்கவும் செய்தனர். வேறு சிலரோ அந்த இளைஞனை கிண்டலாக பார்த்து சிரித்தவாறு இருந்தனர். எதையும் அவன் பொருட்படுத்தவில்லை. பில் வந்ததும் பணம் செலுத்திவிட்டு, ‘‘வீட்டுக்குப் போகலாமாப்பா?’’ என அப்பாவிடம் கேட்டு, அவரைக் கூப்பிட்டுக்கொண்டு கிளம்பினான். வாசல் வரை வந்தபோது ஒரு கணீரென்ற குரல் அவனைத் தடுத்து நிறுத்தியது. ‘‘தம்பி! நீ சிலவற்றை இங்கே விட்டுச் செல்கிறாய்…’’ அவன் திரும்பிப் பார்த்தான். கூப்பிட்டது ஒரு நடுத்தர வயது நபர். அவன் குழப்பத்தோடு தனது பாக்கெட்களைத் தொட்டுப் பார்த்தான். தாங்கள் சாப்பிட்ட டேபிளைப் பார்த்தான். ‘‘நான் எதையும் விட்ட மாதிரி தெரியலையே?’’ என்று கேட்டான். கூப்பிட்டவர் மீண்டும் சொன்னார்… “ஆமாம்! நீ இங்கே இரண்டு விஷயங்களை விட்டு விட்டுச் செல்கிறாய். ஒன்று, இங்கே இருக்கும் இளைஞர்களுக்கு படிப்பினை. இரண்டு, முதுமையை நெருங்கிக் கொண்டிருக்கும் என்னைப் போன்றவர்களுக்கு நம்பிக்கை!’’ அங்கிருந்த அத்தனை பேரும் வாயடைத்துப் போனார்கள்.

Read more