அன்புள்ள உங்களுக்கு…

தலைநகரம் டெல்லியில் காற்று மாசு அதிக அளவு ஏற்பட்டு பள்ளிகளுக்கு விடுமுறை விட வேண்டிய சூழல் ஏற்பட்டது. குழந்தைகள், முதியவர்கள், சுவாசப் பிரச்னை உள்ளவர்கள் போன்றோருக்கு இது

Read more

அன்புள்ள உங்களுக்கு-2

வணக்கம். ‘ஆல் போல் தழைக்க வேண்டும்’ என மூத்தோர்கள் வாழ்த்துவார்கள். முதுமையை இனிமையாக்கும் முயற்சியான இந்த மாத இதழுக்கும் இப்படிப்பட்ட வாழ்த்துகள் குவிகின்றன. தொலைபேசி அழைப்புகள், குறுஞ்செய்திகள், வாட்ஸ்அப் பதிவுகள் என வாழ்த்துகள் வந்தவண்ணம் இருக்கின்றன. இதுவரை பாராட்டியவர்களுக்கும் இனிமேல் பாராட்ட இருப்பவர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வாழ்த்துகளால் நெஞ்சம் நிறைந்து நிற்கிறேன். ‘முதுமை எனும் பூங்காற்று’ மாத இதழின் வெளியீட்டு விழா கோவை லீ மெரிடியன் ஹோட்டலில் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது. திருப்பூர் வெற்றி நல வாழ்வு மையம் இதை நடத்தியது. விழாவில் கலந்து கொண்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு இந்த இதழ் வழங்கப்பட்டது. விழா ஆரம்பிப்பதற்கு முன்பே பலர் படிக்க ஆரம்பித்துவிட்டார்கள். ஆர்வமும் தாகமும் அவர்களின் கண்களில் தெரிந்தது. இவ்விழா சிறப்பாக நடைபெற உதவிய வெற்றி நலவாழ்வு மையத்தின் துணைச் செயலாளர் திரு. ஸ்கை வி.சுந்தரராஜ் அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன். நான் நீண்ட நாள் நலமுடன் வாழ வேண்டும் என வெற்றி நல வாழ்வு மையத்தின் சார்பாக ஆலமரக் கன்று வழங்கி கௌரவப்படுத்தினார்கள். அந்த ஆலமரக் கன்று போலவே இந்த இதழும் வளர வேண்டும். ஒரு மருத்துவர் மாத இதழை நடத்துவது என்பது எளிதான காரியமில்லை. பயனுள்ள இந்த இதழ் எல்லோரையும் சென்றடையுமாறு செய்ய வேண்டும். இதற்கு முக்கியமாகத் தேவைப்படுவது நிதி வசதிதான். அது ஓரளவுக்குக் கிடைத்துவிட்டால், மற்ற விஷயங்களில் நான் கவனம் செலுத்த முடியும். ரசிக்கும், விரும்பும் எதையும் மற்றவர்களுக்குப் பரிந்துரை செய்வது மனித இயல்பு. ‘இந்தக் கடை இட்லி மல்லிகைப்பூ மாதிரி மிருதுவா இருக்கும்’, ‘இந்த அம்மா மாதிரி நேர்த்தியா பூ கட்டி விற்கறவங்க யாருமில்லை’ என பல நல்ல விஷயங்கள் இப்படித்தான் வரவேற்பு பெறுகின்றன. ‘முதுமை எனும் பூங்காற்று’ இதழும் இதை எதிர்பார்க்கிறது. கோவையைச் சேர்ந்த அன்பர் திரு. கே.வி.இராஜகோபால், அக்கறையுடன் தானே முயற்சி எடுத்து 101 பேரிடம் ஆண்டு சந்தா வாங்கிக்

Read more

அன்புள்ள உங்களுக்கு

வணக்கம்!!! முதியோர் நல மருத்துவத் துறை என்பது சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு மருத்துவர்களுக்கே கூட அதிகம் தெரியாத ஒன்றாக இருந்தது. இப்போது அது காலத்தின் கட்டாயமாகிவிட்டது.

Read more